தூத்துக்குடி மக்களை நெருங்கும் DANGER…! பகீர் வீடியோ
தூத்துக்குடி: தூத்துக்குடி நகர் பகுதி மக்களை ஆபத்து நெருங்குகிறது என்பதை உணர்த்தும் வகையில் வெளியாகி உள்ள வீடியோ பகீர் ரகமாக இருக்கிறது.
வளிமண்டல சுழற்சியில் பெய்து வரும் மிக அதிக கனமழை தென் மாவட்டங்களை புரட்டி எடுத்து வருகிறது. தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி என மழை விடாது மக்களை பாடாய் படுத்துகிறது.
சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள் என எங்கு பார்த்தாலும் மழைநீர் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்துவிட்டது. முழங்கால் அளவு தேங்கிய நீரின் அளவு பல பகுதிகளில் இடுப்பளவுக்கு அதிகரித்துவிட்டது.
நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வெள்ள நீர் கரை புரண்டு ஓடும் நிலையில் தூத்துக்குடி நகர் மக்களை ஆபத்து சூழ்ந்திருக்கும் ஒரு நிகழ்வு அரங்கேறி உள்ளது. அம்மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 93 செமீ மழை பதிவாகி இருக்கிறது.
மழையின் எதிரொலியாக அங்குள்ள கோரம்பள்ளம் குளத்தின் கரை உடைந்து தண்ணீர் பெருமளவு வெளியேறி தூத்துக்குடி நகர் பகுதியை நெருங்கி வருவதாக தெரிகிறது. ஓராண்டு மழை ஓர் நாளில் பெய்ய, குளம் உடையும் வீடியோ காட்சி வெளியாகி மக்களை பகீர் அடைய வைத்துள்ளது.
மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.