பிக் பாஸ் நடிகைக்கு மீண்டும் கெட்டிமேளம்…! மாப்பிள்ளை யார் தெரியுமா..?
சென்னை: பிக்பாஸ் புகழ் காஜல் பசுபதி 2வது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சின்னத்திரை உலகில் யாரும் மறக்க முடியாத நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். திரையுலகத்தை தாண்டியும் இந்த நிகழ்ச்சி பற்றி பல்வேறு விமர்சனங்கள், கருத்து வேறுபாடுகள் எழுந்தன. ஆனாலும் வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சி மக்களை சென்று சேர்ந்தது.
பிக் பாஸ் முதல் சீசன் போட்டியின் போது கலந்து கொண்ட போட்டியாளர்களில் முக்கியமானவர் நடிகை காஜல் பசுபதி. வைல்டு கார்டு என்ற ஆப்ஷன் மூலமாக சில வாரங்கள் போட்டியாளராக பங்கேற்றார். இவர் எப்போது சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வான நபர். நாட்டு நடப்பு, அரசியல், சினிமா, பொழுதுபோக்கு என பல்வேறு கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
இப்போது அவர் தாம் 2வது திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று அதிகாரப்பூர்வமாக டுவிட்டரில் அறிவித்துள்ளார். அவரின் அறிவிப்புக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
திடீரென திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது…. அடுத்த வாரம் கல்யாணம்… கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல… தப்பா எடுத்துக்காதிங்க என்று தமது டுவிட்டரில் அவர் பதிவை வெளியிட்டு உள்ளார்.
டான்ஸ் மாஸ்டர் சாண்டியை தான் காஜல் முதலில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் டைவர்ஸ் செய்து கொண்டனர். சாண்டி சில்வியா என்பரை 2வது திருமணம் செய்து கொண்டு, மகள், மனைவி என சந்தோஷமாக உள்ளார்.
நடிகை காஜலின் இந்த அறிவிப்புக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வந்தாலும்… இது உண்மை தானா என்றும் நெட்டிசன்ஸ் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.