அதான்டா சச்சின்…! KOHLI பத்தி 11 வருஷம் முன்பே சொன்ன தீர்க்கதரிசி VIRAL VIDEO
கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி தமது சாதனையை முறியடிப்பார் என்று 11 ஆண்டுகள் முன்பு சச்சின் கூறிய வீடியோ இப்போது இணையத்தில் தெறி ரகமாகி இருக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. ஞாயிறன்று நடக்க உள்ள பைனலில் அசுர பலம் கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. கோப்பை எப்படியும் நமக்கு தான் இந்திய அணி ரசிகர்கள் இப்போது எதிர்பார்ப்புடன் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக அரையிறுதியில் நியூசிலாந்தை வச்சு செய்த இந்திய அணியை கொண்டாட கிரிக்கெட் ரசிகர்களே இல்லை எனலாம். இந்த போட்டியில் விராட் கோலி தமது 50வது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.
மேலும், சர்வதே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம் அடித்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையையும் கோலி படைத்துள்ளார். அவரை கிரிக்கெட் ரசிகர்கள் இன்னமும் கொண்டாடி வரும் வேளையில் இணையத்தில் கோலி நிச்சயமாக தமது சாதனையை முறியடிப்பார் என்று சச்சின் டெண்டுல்கர் 11 ஆண்டுகள் முன்பு சொன்ன வீடியோ வைரலாகி இருக்கிறது.
கடந்த 11 வருடங்கள் முன்பு 100 சதம் அடித்ததற்கான பாராட்டு விழா சச்சின் டெண்டுல்கருக்கு நடத்தப்பட்டது. கிரிக்கெட் ஜாம்பவான்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் என விஐபிக்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பாலிவுட் சூப்பர் நடிகர் சல்மான் கான் சச்சினிடம் பேசுகிறார். அதன் விவரம் வருமாறு;
சல்மான்கான்; உங்கள்(சச்சினிடம்) 100 சதம் என்ற சாதனையை வேறு யாராவது ஒருவரால் முறியடிக்க முடியுமா?
சச்சின் டெண்டுல்கர்; இந்த அறைக்குள் அமர்ந்திருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களால் முடியும்.
சல்மான் கான்: அதற்கு வாய்ப்பே இல்லை… நம்பமாட்டேன், யார் முறியடிப்பார்கள்?
சச்சின் டெண்டுல்கர்; விராட் மற்றும் ரோகித் இருவரும் தனது சாதனையை தகர்த்தெறிவார்கள்.
இந்த சூப்பர் வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் முன்பே நடக்க உள்ளதை முன்கூட்டியே கணித்தவர் சச்சின் என்றும் பாராட்டி மகிழ்கின்றனர்.
VIDEO COURTESY – BOLLYWOOD