Sunday, May 04 11:47 am

Breaking News

Trending News :

no image

மானத்தை வாங்கிய தமிழக எம்எல்ஏ…! ஜனாதிபதி தேர்தலில் ஒரு கூத்து


சென்னை: ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 எம்எல்ஏ வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாத வாக்காக பதிவாகி இருப்பது பெரும் விவாதமாகி உள்ளது.

ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர், பழங்குடியின தலைவர் என அடையாளங்களுக்கு சொந்தமான திரௌபதி முர்மு இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருக்கிறார். ஜனாதிபதியாகும் முதல் பழங்குடியின பெண் என்ற சாதனையையும் அவர் இதன்மூலம் படைத்து உள்ளார்.

ஜூலை 18ம் தேதி நடத்தப்பட்ட 4 சுற்றுகளாக பதிவான வாக்குகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் முர்முவுக்கு 2824 வாக்குகள், யஷ்வந்த் சின்காவுக்கு 1877 வாக்குகள் கிடைத்துள்ளன. நாகலாந்து, ஆந்திரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் யஷ்வந்த் சின்காவுக்கு ஓட்டுகளே விழவில்லை.

bமாத்தம் 4809 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்குகளில்  53 வாக்குகள் செல்லாத வாக்குகள். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 5 செல்லாத வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகி இருக்கின்றன.

தமிழகத்தில் இருந்து 234 வாக்குகளில் முர்முவுக்கு கிடைத்தவை 75 வாக்குகள். சின்ஹா 158 வாக்குகள் பெற்றிருக்கிறார். இன்னும் ஒரு ஆச்சரியம் என்றால் தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ செல்லாத வாக்கை செலுத்தி அதிர்ச்சியை தந்து இருக்கிறார்.

அந்த செல்லாத வாக்கை பதிவு செய்தது யார் என்பது தான் இப்போது தமிழக அரசியலில் பேச்சாக இருக்கிறது.

Most Popular