அண்ணாமலைக்கு ஓட்டில்லா….! பொளந்துகட்டிய சீமான்
நான் கன்னடன், அதை சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்று அண்ணாமலை கூறியதை சுட்டிக்காட்டி சீமான் சொன்ன உனக்கு ஓட்டில்லா என்ற வீடியோ வேற லெவலில் போய் கொண்டிருக்கிறது.
பாஜகவின் பி டீம்… இதுதான் நாம் தமிழர் கட்சி மீது மற்ற கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு. ஆனால், விவசாயி சின்னத்தை மத்திய பாஜக அரசு, தேர்தல் ஆணையம் மூலம் கிடைக்கவிடாமல் பண்ணிவிட்டது என்பது சீமான் புகார்.
அதனால் அண்ணாமலையையும், பாஜகவையும் போகிற இடம் எல்லாம் வச்சு செஞ்சு வருகிறார் சீமான். உச்சக்கட்ட கோபத்தில் பாஜகவை விடாது விமர்சித்து வெளுத்து வாங்கி வருகிறார்.
அதன் உச்சக்கட்டமாக அண்ணாமலையை அவர் பாணியிலேயே கிண்டலடித்து அப்ளாஸ் வாங்கி உள்ளார் சீமான். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, தான் கன்னடன், அதில் பெருமை கொள்கிறேன் என்று பேசி உள்ளார்.
அண்ணாமலை என்றோ பேசியதை இப்போது கெட்டியாக பிடித்துக் கொண்ட சீமான், கர்நாடகாவில் பதவிக்காக அண்ணாமலை போன்று ஒரு தமிழன் பேசுவானா?
தமிழ்நாடு நோடில்லா, காவிரி பிரச்னை நோடில்லா, proud கன்னடன் சொல்றே? இப்போ நாங்க திருப்பி தமிழ்நாடு நோடில்லா, காவிரி issue நோடில்ல, உனக்கு(அண்ணாமலை) இங்க ஓட்டில்லா. அவ்வளவுதான்.
இன்னும் இந்தி, சமஸ்கிருதம்னே பேசிக்கிட்டு இருக்கீங்க? பிஞ்ச செருப்பேயே பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க? என்று பேசி வெளுத்து இருக்கிறார் சீமான்.