போன் பண்ணுங்க… பணம் ஹோம் டெலிவரி…! பிரபல வங்கி சூப்பர்…
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம் போகவேண்டியது இல்லை… பணம் நேராக வீட்டுக்கே டெலிவரி செய்யும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.
இப்போது உலகம் நமது கையில் வந்துவிட்டது… எங்கேயும் எதையும் தேடி போகவேண்டாம். நமக்கு வேண்டிய பொருள், வேண்டிய விலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும்… சில நாட்களில் வீட்டின் வாசலுக்கு வந்து உங்களை அந்த பொருள் சந்திக்கும்.
அது உணவோ, உடையோ அல்லது வேறு எந்த பொருளாக இருந்தாலும் ஆன்லைனில் அட்டகாசமாக வாங்கி நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தலாம். இப்போது அதற்கும் அடுத்த கட்டமாக வீட்டில் இருந்த படியே பணத்தை வங்கியில் இருந்து எடுத்துக் கொள்ளும் வசதியை பிரபல வங்கி அறிமுகம் செய்து இருக்கிறது.
அந்த வங்கி தான் எஸ்பிஐ…மிக பெரிய வங்கியான எஸ்பிஐக்கு கிட்டத்தட்ட 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இப்போது நாடு முழுவதும் கொரோனா நெருக்கடி காலம்.
ஆகையால் வீட்டில் இருந்தபடியே எஸ்பிஐ வங்கியில் இருந்து உங்களுக்கு தேவையான பணத்தை பெற்று கொள்ளலாம்.. அதாவது பணம் டோர் டெலிவரியாக உங்கள் வீட்டு வாசலுக்கு வந்துவிடும்.
வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து கொண்டே பணத்தை அழகாக பெற்று கொள்ளலாம். நாடு முழுவதும் சில குறிப்பிட்ட வங்கி கிளைகளில் மட்டும் தான் இந்த வசதியை எஸ்பிஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது. இனி வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கப்படும்.
பணம் மட்டுமல்ல… வீட்டுக்கே வந்து பணத்தையும், காசோலைகளையும் பெற்று செல்லும் சேவையை எஸ்பிஐ அளித்துள்ளது. அதாவது நாள்தோறும் 20000 ரூபாய் வரை இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இதற்கு அனுமதி. இந்த சேவை பெற 100 ரூபாயுடன்,ஜிஎஸ்டி கட்டணமும் உண்டு. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.. பணம் பெற்றுக் கொள்ள 1800111103 என்ற நம்பருக்கு போன் செய்தால் போதும்.