Sunday, May 04 11:48 am

Breaking News

Trending News :

no image

சட்டை கிடையாது.. ஆனா கையில் துப்பாக்கி…! தளபதி 65 பர்ஸ்ட் லுக் 'மாஸ்' ரிலீஸ்…!


சென்னை: தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி பட்டையை கிளப்பி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். உலகம் முழுவதும் வயது வித்தியாசம் இன்றி இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். முன்னணி நடிகரான அவரை வைத்து படம் இயக்க இன்னமும் ஏராளமான இயக்குநர் கதைகளை சொல்லி விட்டு வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.

அவர் நாளை தமது 42வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். அதற்கு முன்னதாக இன்று மாலை 6 மணிக்கு அவரின் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சொன்னபடி சரியாக 6 மணிக்கு தளபதி65 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. லைட்டாக தாடி வைத்து, தலையை குனிந்த படி, சட்டையின்றி வெள்ளை நிற முண்டா பனியனுடன் அந்த போஸ்டரில் நடிகர் விஜய் காட்சி தருகிறார்.

அதில் விசேஷம் என்னவென்றால்… கையில் அதி நவீன துப்பாக்கி ஒன்றை வைத்தபடி பக்காவாக, போஸ் கொடுத்தபடி இருக்கிறார் நடிகர் விஜய். மாஸாக வெளியாகி இருக்கும் இந்த தளபதி 65 பர்ஸ்ட் லுக் போஸ்டரை கண்டு விஜய் ரசிகர்கள் மிரண்டு உள்ளனர்.

பக்கா மாஸ்… சூப்பர்… தளபதி என்றும் தளபதி தான் என்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் பகிர்ந்து தெறிக்கவிட்டு உள்ளனர். இந்த படத்தின் இயக்குர் நெல்சன். படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தான் தமது டுவிட்டர் பக்கத்தில் தளபதி65 பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளது.

படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை… ஆகையால் இப்போதைக்கு தளபதி 65 என்று அடையாளமாக வைத்துள்ளனர். கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

 

Most Popular