Sunday, May 04 12:56 pm

Breaking News

Trending News :

no image

குறைந்த ரேட்டில் பெட்ரோல் போடலாம்..! ஆனா… இப்படி செய்யணும்…!


மும்பை: கம்மியான விலையில் பெட்ரோல் போடும் சலுகையை அதாவது பெட்ரோல் போடும் வசதியை பிரபல வங்கியான ஐசிஐசிஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

காலையில் எழுந்து காபி குடிக்கிறோமோ இல்லையோ…. இன்னிக்கு பெட்ரோல் விலை என்ன..? என்றுதான் நம்மில் பலரும் பார்த்து வருகிறோம். காரணம் அந்தளவுக்கு ஏறி இருக்கிறது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை.

விலையேற்றத்தால் கார், பைக் ஆகியவற்றை தவிர்த்து பேருந்துகளை பலரும் நாட ஆரம்பித்துள்ளனர். இன்னும் ஒரு தரப்பினரோ வீடுகள் அருகில் இருந்தால் சைக்கிளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

இந்த பெட்ரோல் விலை எப்போது குறையும் என்று தெரியாது… பெட்ரோல் இல்லாமல் வண்டியும் ஓட்ட முடியாது. ஆனால் பெட்ரோல் விலையில் சலுகை பெறலாம். இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதகளம் பண்ணி இருக்கிறது ஐசிஐசிஐ வங்கி.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் ஐசிஐசிஐ கைகோர்த்து இந்த அசத்தல் திட்டத்தில் இறங்கி இருக்கிறது. அதாவது புதிய கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலம் இந்த ஆபரை அறிவித்துள்ளது.

சூப்பர் சேவர் கிரெடிட் கார்டு மூலமாக இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம். குறைந்த விலையில் பெட்ரோல் என்பது கேஷ் பேக் சலுகையாகும்.

தொடக்கத்தில் சந்தை விலையில் பெட்ரோல் போட்டுக் கொள்ள வேண்டும், பின்னர் சலுகையை பெற்று கொள்ளலாம். சரி… இது மட்டுமல்ல… மொபைல் ரீசார்ஜில் தள்ளுபடியும் செய்து கொள்ளலாம்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோல் பங்குகளில் இந்த சலுகை கிடைக்கும். இந்த கார்டு கொண்டு பெட்ரோல், டீசல் விலையில் சலுகை பெறலாம்.

சரி.. இந்த கார்டு எங்களுக்கு வேண்டும் என்று நினைப்பவர்கள், ஐசிஐசிஐ வங்கியை அணுகலாம். இன்டர்நெட் பேங்கிங், ஐமொபைல் பே மூலமாக விண்ணப்பிக்கலாம். பெட்ரோல், டீசல் மட்டுமல்ல… மொபைல் பில், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளிட்ட பல தேவைகளுக்கு இந்த கார்டை உபயோகித்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

Most Popular