பாஜக முக்கிய பிரமுகர் வீட்டை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்…! வேற லெவல் காரணம்
நொய்டா: உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்கிரமித்து கட்டியிருந்த பாஜக பிரமுகர் வீட்டை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர்.
நொய்டாவில் கிராண்ட் ஓமேக்ஸ் என்ற குடியிருப்பு வளாகம் அமைந்திருக்கிறது. அங்குள்ள பூங்காவை ஸ்ரீகாந்த் தியாகி என்பவ ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளார். இவர், பாஜக விவசாயி பிரிவில் உறுப்பினராக இருக்கிறார்.
கிராண்ட் ஓமேக்ஸ் வளாகத்தில் மரக்கன்றுகளை நட ஸ்ரீகாந்த் தியாகி முடிவு செய்து நட்டுள்ளார். ஆனால் குடியிருப்பு வளாக விதிகளை மீறி இவ்வாறு செய்ததாக கூறி பெண் ஒருவர் தட்டி கேட்டுள்ளார். அப்போது பெரும் வாக்குவாதம் எழ, அந்த பெண்ணை தியாகி முகத்தில் கை வைத்து தள்ளி விட்டுள்ளார்.
இது குறித்து அந்த பெண் புகார் அளிக்க… அவ்வளவுதான் தலைமறைவாகி விட்டார் ஸ்ரீகாந்த் தியாகி. பெரும் சர்ச்சையை இந்த விவகாரம் ஏற்படுத்த, இணையத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு புகார்கள் பறந்தன. நடவடிக்கை எங்கே..? புல்டோசரை அனுப்பி வைக்க மாட்டீர்களா? என்று கேள்விகள் விழுந்து கொண்டே இருந்தது.
அதேநேரத்தில் தியாகியின் ஆதரவாளர்கள் கும்பலாக சென்று புகார் அளித்த பெண் வீட்டை முற்றுகையிட்டு அதகளம் பண்ணி உள்ளனர். இந்த விவரமும் முதல்வர் காதுக்கு போக, சட்டவிரோத ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டு உள்ள தியாகியின் வீட்டை இடித்து தள்ள புல்டோசர் வந்தது.
தியாகியின் வீட்டை கொத்து பரோட்டாவாக போட்டு முற்றிலும் அதிகாரிகள் இடித்து தள்ளினர். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்த அதிரடிக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதே நேரத்தில் இந்த விவகாரத்தை மேற்கோள் காட்டி பேசும் மற்ற கட்சிகள் தியாகி பாஜக உறுப்பினரே அல்ல என்று கூறி வருகின்றன.