பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது…? வெளியான முக்கிய தகவல்…!
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் கல்வி நிலையங்கள் ஒட்டு மொத்தமாக மூடப்பட்டது. ஆன்லைன் கல்வி தான் 2வது ஆண்டாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
கொரோனா குறைந்தால் பொது தேர்வை நடத்தலாம் என்று அரசு காத்திருந்தது. ஆனால் அதற்கான சூழல் எழாததால் பிளஸ் 2 பொது தேர்வு ரத்த என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் உயர்கல்வியில் சேர பிளஸ் 2 மதிப்பெண்கள் கட்டாயம் தேவை என்பதால் மாற்று வழிகளை அரசு யோசித்து, உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
10 மற்றும் 11ம் வகுப்பு எழுத்து தேர்வில் இருந்து மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அரசின் வழிகாட்டுதல்படி அனைத்த மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டு வருகின்றன. மதிப்பெண் கணக்கீடு, அதை இணையத்தில் பதிவேற்றுதல் என பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
எக்ஸ்பிரஸ் வேகத்தில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது நாளை அல்லது அதற்கு மறுநாள் பிளஸ் 2 மார்க் விவரங்கள் வெளியாகும் என்று தகவல் வந்திருக்கிறது. இதை அறிந்த மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.