உணவுத்துறை அமைச்சரை ‘தொற்றிய’ கொரோனா….! தொடர்பில் இருந்தவர்கள் தனித்திருக்க அட்வைஸ்..!
புனே: மகாராஷ்டிராவில் உணவுத்துறை அமைச்சர் சாகன் புஜ்பாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
நாட்டில் கொரோனாவால் அதிகப்படியான சேதாரத்தை சந்தித்து இருப்பது மகாராஷ்டிரா மாநிலம். அம்மாநிலத்தில் இருந்து 19 லட்சம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துவிட்டாலும், 55 ஆயிரம் பேர் இன்னமும் சிகிக்சையில் உள்ளனர்.
இந் நிலையில், உணவு, சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் சாகன் புஜ்பாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.
அந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறி இருப்பதாவது: நான் கொரோனா தொற்றறால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். ஆகவே என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை மருத்துவ பரிசோதனைக்கு ஆட்படுத்தி கொள்ளுங்கள். எனது உடல்நிலை நன்றாக உள்ளது, கவலை வேண்டாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.