Sunday, May 04 12:52 pm

Breaking News

Trending News :

no image

கொரோனா தடுப்பூசி..! முதல்வர் ஸ்டாலின் ‘மாஸ்’ பிளான்…!


சென்னை: உலகளாவிய டெண்டர்கள் மூலம் தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் வகையில் தமிழக அரசு அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.

கொரோனாவின் கோரத்தாண்டவம் தமிழகத்தில் குறைவதாக தெரியவில்லை. கொரோனாவின் 2ம் அலை காரணமாக நாள்தோறும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

ஒரு பக்கம் தொற்றுகள் அதிகரிக்க, அதிகரிக்க மறுபக்கம் மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலையே காணப்படுகிறது. இந் நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போதிய அளவு இல்லாததால் தமிழக அரசே தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது.

தமிழகத்துக்கு கிட்டத்தட்ட 13 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு 18 வயது 45 வயது வரை உள்ளவர்களுக்கு போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் உலகளாவிய  டெண்டர்கள் மூலம் தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. 18 வயது முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் மிகவும் குறுகிய காலத்தில் தடுப்பூசி போட வேண்டும் என்று அனைத்து உத்தரவாதங்களையும் தமழக அரசு அளித்து உள்ளது.

Most Popular