Sunday, May 04 11:47 am

Breaking News

Trending News :

no image

அண்ணாமலைக்கு ‘அரோகரா’வா…? என்ன நடக்குது அரவக்குறிச்சியில்….?


சென்னை: பாஜகவின் முக்கிய தொகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பின்தங்கியே உள்ளார்.

தமிழகத்தில் கருத்துக்கணிப்புகளில் கூறிய படியே பெரும்பான்மையுடன் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது. இதுவரை வெளியான தகவல்கள்படி மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 150க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

அதிமுக கூட்டணியானது 75க்கும் அதிகமாக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து பல தொகுதிகளில் வாக்கு எண்ணப்பட்டு வந்தாலும் திமுக ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது. தொகுதிகளின் நிலவரங்கள் வெளியாகி கொண்டிருக்கும் தருணங்களில் சில முக்கிய தொகுதிகளிலும் நிலவும் வாக்கு எண்ணிக்கை விவரங்களை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

அதில் ஒன்றுதான் அரவக்குறிச்சி தொகுதி. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை களம் இறக்கப்பட்டார். பெரும் எதிர்பார்ப்பு, ஸ்டார் தொகுதியான அரவக்குறிச்சியில் பிரச்சாரம் களைகட்டி வாக்குப்பதிவும் முடிந்து போனது.

தற்போதுள்ள முன்னணி 3 மணி நிலவரப்படி தேர்தல் ஆணைய இணையதளத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பின்தங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 2 சுற்றுகள் முடிவில் 5198 வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார். திமுக வேட்பாளர் இளங்கோ 5781 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கிட்டத்தட்ட 600 சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை பின்னால் உள்ளநிலையில் அடுத்தடுத்த சுற்றுகளில் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்று தெரியவில்லை.

Most Popular