நடிகர் வடிவேலுவுடன் நடித்த பிரபல நடிகர் 'திடீர்' மரணம்…!
சென்னை: வைகை புயல் வடிவேலுவுடன் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் காளிதாஸ் திடீரென காலமானார்.
கோலிவுட்டுக்கு கொரோனாவால போதாத காலம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக பல முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள், திரையுலக பிரபலங்களின் உறவினர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
இந் நிலையில் கோலிவுட்டுக்கு அடுத்த அதிர்ச்சியாக நடிகர் காளிதாஸ் காலமாகி விட்டார். தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக டப்பிங் கலைஞராகவும், நடிகருமாக இருப்பவர் காளிதாஸ். வில்லன் நடிகர்களுக்கு இவர்தான் பின்னணி குரல் கொடுப்பார். வில்லன்களாகவும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.
வடிவேலுவுடன் அவர் நடித்த படங்கள் சிறப்பாக இருக்கும். கணீர் குரலுக்கு சொந்தக்காரனான காளிதாஸ், சின்னத்திரையில் சக்சஸ் தொடரான மர்ம தேசத்துக்கு குரல் கொடுத்தவர்.
அண்மைக்காலமாக உடல்நலம் பாதித்திருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவை குணசித்திர நடிகர் மோகன் ராம் உறுதிப்படுத்தி அறிவத்து உள்ளார். காளிதாஸ் மறைவு கோலிவுட் உலகை கடும் சோகத்துக்கு தள்ளி இருக்கிறது.