ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்…! திரிபாதியின் திடீர் உத்தரவு..!
சென்னை: சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீது எழுப்பப்பட்ட பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மூத்த காவல்துறை அதிகாரி டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் டிஜிபி திரிபாதியிடம் நேரடியாக சென்று பாலியல் புகார் ஒன்றை கொடுத்தார். இந்த விவகாரம் தமிழக காவல்துறையை அதிர வைத்தது.
சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகளும், சமூக நல அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த பாலியல் புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு உள்ளார்.
சிபிசிஐடியினர் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனையும் விசாரிக்க உள்ளனர். முன்னதாக பாலியல் புகாரை அடுத்து, ராஜேஷ்தாஸ் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலில் உட்கார வைக்கப்பட்டு உள்ளார்.