12ம் வகுப்பு மாணவரா…? நாளை காலை 11 மணிக்கு ரெடியா இருங்க…!
சென்னை: தமிழகத்தில் நாளை காலை 11 மணிக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
கொரோனாவின் கோரத்தாண்டவம் மாணவர்களின் கல்வியை வெகுவாக பாதித்துள்ளது. 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிட தனி கமிட்டி அமைக்கப்பட்டு அனைத்தும் கணக்கிடப்பட்டன.
இப்படிப்பட்ட சூழலில் நாளை காலை 11 மணிக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகுகின்றன. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார்.
தேர்வு முடிவுகளை www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து, மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் பள்ளியில் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.