என்னது..! ஏடிஎம், பெட்ரோல் பங்க் மூலம் கொரோனா பரவுகிறதா..? டாக்டர்ஸ் சொல்வது என்ன..?
சென்னை: பெட்ரோல் பங்குகள், வங்கி ஏடிஎம்கள் மூலமாக கொரோனா பரவுமா என்ற சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கொரோனா வந்தாலும் வந்தது, மக்கள் படாதபாடுகின்றனர். இந்த வைரஸ் கண்டறியப்பட்ட சீனா இப்போது சகஜ நிலைமைக்கு போக, இந்தியாவே தடுமாறி விழிபிதுங்கி வருகிறது.
கேரளாவில் முதல் தொற்று கண்டறியப்பட்டு இப்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது. முகத்தில் மாஸ்க் இல்லாமல் வெளியே போகவே முடியாத நிலை உருவாகிவிட்டது.
கொரோனா எப்படி பரவும் என்று பலரும் பல்வேறு கதைகளை பரப்பி வருகின்றனர். சட்டையில் பரவும், கம்பி வழியாக பரவும், பாத்திரங்களில் ஒட்டி இருக்கும் என்று டிசைன், டிசைன்களாக பல கதைகள் இணையத்தில் இன்றும் கதைக்கப்பட்டு வருகின்றன.
அதில் லேட்டஸ்ட் பெட்ரோல் பங்குகள், வங்கி ஏடிஎம்கள் வழியாக கொரோனா பரவுமா என்பது தான். இது குறித்து மருத்துவர்களும் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறி இருப்பதாவது:
கொரனோ மிக வேகமாக பரவக்கூடியது. ஆனால் ஏடிஎம் சென்டர்கள், ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றில் இருந்தும் மற்றவருக்கு கொரோனா பரவ சான்ஸ் இல்லை.
பெட்ரோல் பங்குகளிலும் பரவாது. காலணிகள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பர்ஸ் மூலமாகவும் கொரோனா பரவாது. ஆனாலும் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.
வெளியே எங்கு போனாலும் மாஸ்க் அணிய வேண்டும், கைகளை சோப் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும், கொரோனா பரவலை தடுக்கலாம் என்று கூறி உள்ளனர்.