Sunday, May 04 11:44 am

Breaking News

Trending News :

no image

செம ‘ஷாக்’…! கொரோனாவை விட கொடிய வைரஸ்…! இந்தியாவில் கண்டுபிடிப்பு


புனே: கொரோனாவை விட மிக ஆபத்தான வைரசான நிபா வைரஸ் புனேயில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் தீரவில்லை. கடந்த 2 வாரங்களாக நிலைமை பரவாயில்லை என்று கூறுமளவுக்கு இருக்கிறது. ஆனாலும், கொரோனாவின் பரவல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

சுகாதார தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசு விழிப்புடன் இருக்கின்றன. இப்போது பெரும் அதிர்ச்சியாக மகாராஷ்டிராவில் 2 வகையான கொடிய நிபா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நிபா வைரஸ்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல… விலங்குகளுக்கும் மிகவும் ஆபத்தான ஒன்று. மகாராஷ்டிராவில் வவ்வால்களில் இப்படிப்பட்ட வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயமாகும்.

புனேவில் என்ஐவி வைரலாஜி ஆராய்ச்சியாளர்கள் இந்த நிபா வைரஸ் கண்டுபிடித்துள்ள விவரத்தை வெளியிட்டு உள்ளனர். இதோடு அவர்கள் கூறி இருக்கும் மற்றொரு விஷயம் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் இப்போது உள்ளது போன்று மிகவும் வெளிப்படையாக நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது கிடையாது என்று அவர்கள் கூறி உள்ளனர்.

2001, 2007ம் ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் இந்த நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 2018, 2019ம் ஆண்டுகளில் கேரளாவில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இன்னொன்றையும் முக்கியமாக கவனிக்க வேண்டும்… நிபா வைரசுக்கு என்று சிகிச்சையும், தடுப்பூசியும் கிடையாது. இந்த வைரஸ் தொற்றினால் 65 சதவீதம் பேர் உயிரிழந்துவிடுவார்கள் என்பது அதிர்ச்சியான ஒன்று.

Most Popular