மறைந்த நடிகை ஜெயந்தி, நடிகர் பிரசாந்த் உறவினர்களாமே…? கோலிவுட்டில் லீக்கான சங்கதி
சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தியும், நடிகர் பிரசாந்தும் உறவினர்கள் தாம் என்ற புது தகவல் கோலிவுட்டில் தெரிய வந்துள்ளது.
திரையுலகின் பழம்பெரும் நடிகை ஜெயந்தி தமது 76வது வயதில் நேற்று காலமானார். அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 500க்கும் அதிகமான படங்களில் நடித்தவர்.
இவரது பூர்வீகம் கர்நாடகாவின் பெல்லாரி. குழந்தை நட்சத்திரமாக திரையுலககுக்கு அறிமுகமானவர். எம்ஜிஆர், ஜெமினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்ளுடன் நடித்து புகழ்பெற்றவர். மிகவும் திறமையான நடிகர் என்ற பெயர் எப்போதும் இவருக்கு உண்டு.
நடிகை ஜெயந்தி, கோலிவுட் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு உறவினர் என்ற விவரம் இப்போது வெளியாகி உள்ளது. அது எப்படி என்று கேள்வி கேட்பவர்கள் கீழ்க்கண்ட பதிலை கொஞ்சம் ஆழ்ந்து படிக்க வேண்டும்…
அதாவது நடிகர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன். இவருக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. இவரது மனைவி சாந்தி. மறைந்த பிரபல தெலுங்கு இயக்குநர் மற்றும் நடிகர் பெகட்டி சிவராம் மகள்.
இங்கு தான் நாம் முக்கிய விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்த பெகட்டி சிவராமுக்கு (நடிகை ஜெயந்தி அப்பா) 2 மனைவிகள் உள்ளனர். அதில் 2வது மனைவிதான் நடிகை ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
பெகட்டி சிவராம் முதல் மனைவி மகள் தான் நடிகர் பிரசாந்தின் தாயார் சாந்தி. சுத்தி வளைத்து பார்த்தால் மறைந்த நடிகை ஜெயந்தி, நடிகர் பிரசாந்துக்கு சின்னபாட்டி ஆவார். இந்த லேட்டஸ்ட் தகவல்தான் இப்போது கோலிவுட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.