#PathuThala பாஜக பிரமுகர் தியேட்டரில் தீண்டாமை…! ஷாக் வீடியோ
சென்னை: சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் படம் பார்க்க வந்த நரிக்குறவ பெண்களை உள்ளே அனுமதிக்காத நவீன தீண்டாமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவுக்கு சாதி,மதம் கிடையாது, ஏழை, பணக்காரன் கிடையாது. எத்தனை லட்சம் ரூபாய் தியேட்டர் என்றாலும், நவீன வசதிகள் இருந்தாலும் குறைந்த பட்ச கட்டணம் வைக்க வேண்டும் என்பது விதி.
பிரபல மால்களில் உள்ள தியேட்டர்களில் 10 ரூபாய்க்கு டிக்கெட் உண்டு. அனைத்து தரப்பு மக்களும் தியேட்டர்களில் படம் பார்க்க வேண்டும் என்பதே இதன் முழு அர்த்தம்.
ஆனால், சென்னையில் உள்ள பிரபல ரோகிணி தியேட்டரில் நடந்த நவீன தீண்டாமை இன்று தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இன்று சிலம்பரசன் நடிப்பில் பத்து தல படம் தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்க்க ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர் இன மக்கள் வந்துள்ளனர்.
நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர், தமது 10 வயது மகளுடன் தியேட்டர் வந்துள்ளார். டிக்கெட் வாங்கியவர் அதை பரிசோதித்து உள்ளே அனுமதிக்கும் இடத்துக்கு வந்தபோது, டிக்கெட் பரிசோதகர் அவர்களை உள்ளே விட மறுத்துள்ளார். டிக்கெட் இருந்தும் நவீன தீண்டாமை என்ற பெயரில் அவர்களை உள்ளே விட மறுத்ததாக தெரிகிறது.
இதை அங்கு வந்த ரசிகர் ஒருவர் தட்டிக் கேட்டுள்ளதோடு, டிக்கெட் இருக்கு, உள்ளே அனுப்புங்க என்று கேட்க தியேட்டர் நிர்வாகம் மறுத்திருக்கிறது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் படு டிரெண்டிங் ஆகி உள்ளதோடு, நவீன தீண்டாமையை கடைபிடித்த தியேட்டர் மீதும் கடும் விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது.
தியேட்டரில் என்ன நடந்தது என்பதை இங்கே வீடியோவாக கீழே காணலாம்;