Sunday, May 04 12:00 pm

Breaking News

Trending News :

no image

மிமிக்ரி பண்ணிட்டாய்ங்க…! காலணி வீச அண்ணாமலை பிளான்..? குரல் யாருடையது..?


சென்னை: பிடிஆர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தை எப்படி அரசியலாக்குவது என்று யோசித்து கொண்டிருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும் ஆடியோ பற்றி அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.

பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணன் உடல் கடந்த 13ம் தேதி மதுரை வந்தது. அப்போது அஞ்சலி செலுத்தும் நேரத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பாஜக இடையே சலசலப்பு உண்டானது.

ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்த அமைச்சர் காரை பாஜகவினர் முற்றுகையிட்டனர். கார் மீது செருப்பு வீசப்பட்டது, பெரும் சர்ச்சையும், கண்டனமும எழ… மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இப்படி ஒரு சம்பவம் நடக்க அண்ணாமலை தான் காரணம் என்பது திமுகவின் முக்கிய குற்றச்சாட்டு. இப்போது இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அண்ணாமலையும் பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனும் பேசிய செல்போன் உரையாடல் பதிவு வெளியாகி உள்ளது.

அதில் பிடிஆர் விவகாரத்தை பற்றி இருவரும் பேசுவது போலவும், இதை வைத்து எப்படி அரசியல் செய்வது என்று யோசித்துக் கொண்டிருப்பதாக அண்ணாமலை கூறுவதாகவும் அந்த ஆடியோவில் குரல்கள் ஒலிக்கின்றன.

நாங்க அன்னிக்கே சொன்னோம்.. இப்போ புரிஞ்சுதா என்று திமுகவினர் வீடியோவை வைரலாக்க, பாஜக தரப்பில் இருந்து மறுப்பு தரப்பட்டு உள்ளது.

இது குறித்து பேசியிருக்கும் மகா சுசீந்திரன், டாக்டர் சரவணன் திட்டமிட்ட சதி, எடிட் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். ஆடியோவில் இருப்பது எங்கள் குரல் அல்ல என்று கூறி இருக்கிறார்.

விளக்கம் கொடுத்த கையோடு, ஆடியோவை மிமிக்ரி செய்து வெளியிட்டு விட்டனர் என்று கூறி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவும் அளித்துள்ளார்.

Most Popular