Sunday, May 04 12:31 pm

Breaking News

Trending News :

no image

கேரளாவால் தமிழகத்துக்கு வரும் சிக்கல்…! நெருங்கும் கொரோனா 3வது அலை…?


சென்னை: கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது, தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது.

தமிழகத்தில் கடந்த மே 21ம் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு என்பது 36 ஆயிரமாக இருந்தது. இப்போது அது 3 ஆயிரம் என்கிற அளவுக்கு குறைந்திருக்கிறது. இன்னமும் 33 ஆயிரம் சிகிச்சையில் உள்ள நிலையில் கொரோனா 2வது அலை முற்று பெறும் என்று நம்பிக்கை தென்படுகிறது.

அதே நேரத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை தமிழகத்துக்கு புதிய சிக்கலை உருவாக்கி இருக்கிறது. கேரளாவில் நாள்தோறும் 8 ஆயிரம் பாதிப்புகள் என்ற ரீதியில் பதிவாகி உள்ளன.

இன்னமும் 1 லட்சம் பேர் கேரள மாநிலத்தில் கொரோனா சிகிச்சையில் இருக்கின்றனர். இந் நிலையில் கேரளாவில் பாதிப்புகள் உயர்ந்து கொண்டே வரும் சூழலில் தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன.

கோவை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட எல்லை மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு இருக்கின்றன. மாவட்டங்கள் தோறும் வீடுகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கேரளாவில் இருந்து யாராவது வந்தால் அவர்கள் முழுமையாக பரிசோதனைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

ஏதேனும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக திருப்பி அனுப்பப்படுகின்றனர். இப்போதைய நிலவரப்படி கேரளாவால் தமிழகத்துக்கு எந்த சிக்கலும் இல்லை என்றாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் என்பது மட்டும் புலனாகிறது.

Most Popular