'கப்சிப்'என இருந்து திமுகவை பாராட்டிய அதிமுக சீனியர்…! விழுகிறதா அடுத்த விக்கெட்…?
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினை அதிமுகவின் சீனியரான மைத்ரேயன் பாராட்டி உள்ளது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
முதலமைச்சராக பொறுப்பேற்றதும் என்ன செய்ய போகிறார்? கொரோனா தொற்றை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று ஸ்டாலினை நோக்கி ஆயிரக்கணக்கான கேள்விகள் எழுந்தன. ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் கொரோனா தடுப்பு பணியே பிரதானம் என்று முழு மூச்சாய் களத்தில் இறங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முழு ஊரடங்கு, தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் முகாம், கொரோனா சிகிச்சை நடைமுறைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களே தமிழக அரசை பாராட்டி தள்ளுகின்றன. அதிமுக மட்டுமல்ல, பாமகவின் ராமதாசும் பாராட்டி தள்ளி இருக்கிறார்.
கொரோனா காரணமாக கோயில்கள் மூடப்பட்டு உள்ளதால் அர்ச்சகர்கள், பிறநிலை பணியாளர்களுக்கு நிலையான சம்பளமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு உதவித்தொகை, 15 வகையான மளிகை பொருட்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைகயை தான் அதிமுக சீனியரும், முன்னாள் எம்பியுமான மைத்ரேயன் பாராட்டு தள்ளி உள்ளார்.
ஸ்டாலினை மட்டுமல்ல, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும் மனதார பாராட்டி டுவிட் போட்டுள்ளார். இதுதான் இப்போது பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்ற மைத்ரேயன் பாராட்டு பற்றி தான் இப்போது அதிமுகவில் பேச்சாக உள்ளது. தற்போது சில காலம் அதிமுகவில் முக்கியத்துவம் தரப்படாமல் இருப்பதால் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
கட்சியின் எந்த நடவடிக்கைகளிலும் பட்டும், படாமல் இருந்து வரும் அவர் புறக்கணிக்கப்படுவதாகவும் பேச்சுகள் எழுந்தன. இப்படி அனைத்து சந்தேகங்களும் லைன் கட்டி இருக்கும் தருணத்தில் பாராட்டும் வந்து சேர… அடுத்த விக்கெட் விழுபோகிறதோ என்று சந்தேக ரேகைகள் படர ஆரம்பித்து உள்ளன.