சூர்யா… வேண்டாம்…! கண்டிக்கும் தமிழக பாஜக தலைவர் முருகன்
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கண்டித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்து முடிந்தது. 15 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். நீட் தேர்வு காரணமாக கடந்த சனிக்கிழமை தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
நடிகர் சூர்யா கடுமையான வார்த்தைகளுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். தமிழக அரசியலில் அவரது அறிக்கை பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆனால், பாஜகவினர் நடிகர் சூர்யாவின் செயல்பாடுகளை கண்டித்து வருகின்றனர். இந் நிலையில், நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கண்டித்துள்ளார்.