#TNAU ஆசிரியரல்லாதோர் சங்க தேர்தல்…! புதிய நிர்வாகிகள் தேர்வு
கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆசிரியரல்லாதோர் சங்க தேர்தல் வெளியிடப்பட்டு உள்ளன.
கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (TNAU) ஆசிரியரல்லாதோர் சங்க தேர்தல் நடைபெற்றது. கடந்த 30ம் தேதி நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
அதன்படி, மாநில தலைவர் தேர்தலில் ஆனந்தன், மாணிக்கவாசகம் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 460 வாக்குகள் பெற்ற ஆனந்தன், மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். துணை தலைவர் பதவிகளுக்காக தேர்தலில் புனிதவதி, ராஜேஷ்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பொதுச் செயலாளராக எலிசபெத் ராணியும், கோவை மைய மாநில இணை செயலாளர்களாக கனகராஜ், சண்முகசுந்தரம் ஆகியோர் ஜெயித்துள்ளனர். மாநில பொருளாளராக பாரதியும், தெற்கு மண்டல மாநில துணை தலைவராக கணேசனும் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
482 வாக்குகள் பெற்ற மலைச்சாமி, தெற்கு மண்டல மாநில இணை செயலாளராக தேர்வாகி உள்ளார். இதேபோன்று வடக்கு மண்டல மாநில துணை தலைவராக ரவி 460 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வடக்கு மண்டல மாநில இணை செயலாளருக்கான தேர்தலில் லட்சுமணன் வென்று உள்ளார்.
வெற்றி பெற்றுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆசிரியரல்லாதோர் சங்கத்தினர், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.