நாளை முதல் அமல்….! டீக்கடைகள் இயங்க தடை… மற்ற கடைகளுக்கும் நேர கட்டுப்பாடு…!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை போட்டு தாக்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு என்பது 30 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி தருகிறது. தினமும் உச்சக்கட்ட பாதிப்பு பதிவாகி வருவதால் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் நாளை முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. அதன்படி கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை (15ம் தேதி) முதல் கடுமையாக்கப்படுகிறது மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் திறக்க அனுமதி இல்லை. டீக்கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி இல்லை. 17ம் தேதி முதல் உள் மாவட்டம் வெளி மாவட்டம் செல்ல E Pass கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.