பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை…? முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை…!
சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் 27 ஆண்டுகளை கடந்து சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது.
இந் நிலையில் எழுவர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமை வழக்கறிஞர் சண்முகம்சுந்தரம் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையானது முதல்வர் ஸ்டாலின் வீட்டில் நடைபெற்றது.
சட்டசபை கூட்டத்தொடரின் போது 7 பேர் விடுதலை தொடர்பாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
7 பேர் விடுதலை தொடர்பாக பல வழக்குகளை உச்ச நீதிமன்றம் எதிர் கொண்டு இருந்தாலும், தமிழக அரசு தீர்மானத்தின் மீதான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது, குறிப்பிடத்தக்கது.