17 மாவட்டங்களுக்கு வார்னிங்….! உஷாரா இருங்க
சென்னை; கிட்டத்தட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை இன்னமும விடாமல் பெய்து வருகிறது.
சில மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும், மயிலாடுமுறை மாவட்டத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே விடுமுறை உண்டா இல்லையா என்பதை அறிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந் நிலையில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
எந்தெந்த மாவட்டங்களில் மழை வாய்ப்பு… பட்டியல் இதோ;
சென்னை
செங்கல்பட்டு
திருவள்ளூர்
கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திண்டுக்கல்
கோயம்புத்தூர்
திருப்பூர்
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை
விழுப்புரம்
ராணிப்பேட்டை
அரியலூர்
ராமநாதபுரம்
திருவாரூர்
பெரம்பலூர்