அவ்வளவு தான்..! பேஸ்புக், டுவிட்டருக்கு தடை…? காத்திருக்கும் அதிரடி நடவடிக்கை
டெல்லி: ஒழுங்குமுறை நடவடிக்கைகளை பின்பற்றாத காரணத்தால் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு விரைவில் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சமூக வலைதளங்கள், ஓடிடி ஆகியவற்றுக்கு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசானது புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. 3 மாதங்களுக்குள் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வர இன்னமும் 2 நாட்கள் தான் உள்ளது. புதிய விதிகளுக்கு டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை மத்திய அரசின் விதிகளுக்கு கட்டுப்படவில்லை.
இந் நிலையில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த செயலிகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.