வாடிக்கையாளர்களே…! இந்த 4 வங்கிகள் IFSC எண் இயங்காது…!
டெல்லி: 4 வங்கிகளின் ஐஎப்எஸ்சி எண் ஜூலை 1ம் தேதி முதல் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி பரிந்துரைகள்படி சில வங்கிகள் வேறு சில வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. அதன்படி சிண்டிகேட் வங்கியானது கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது. அதனால் வரும் 1ம் தேதி முதல் சிண்டிகேட் வங்கி ஐஎப்எஸ்சி கோடு இயங்காது.
ஜூலை 1ம் தேதிக்கு பிறகு SYNB என தொடங்கும் அனைத்து ஐஎப்எஸ்சி கோடுகளும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பணத்தையும் வங்கி கணக்கில் பெற்றுக் கொள்ள முடியாது, இணைதள வங்கி சேவையும் கிடைக்காது.
இதே போன்று, பாங்க் ஆப் பரோடாவுடன் சேர்க்கப்பட்ட விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றின் ஐஎப்எஸ்சி கோடும் ரத்து செய்யப்படுகிறது. ஆகவே வாடிக்கையாளர்கள் அந்தந்த வங்கி கிளைகளுக்கு சென்று உரிய விவரங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.