Sunday, May 04 11:42 am

Breaking News

Trending News :

no image

தமிழக அரசியலில் மாறும் காட்சிகள்…! அதிமுக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய 2 கட்சிகள்…!


சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சியும் வெளியேறி உள்ளது.

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாலை 4.30 மணிக்கு அறிவித்தது. அதன்படி தமிழகத்துக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் தமிழக அரசியல் களத்தில் மாற்றங்கள் உருவாக ஆரம்பித்து இருக்கின்றன. அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி  வெளியேறிவிட்டது.

திமுக கூட்டணியில் இருந்து பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி வெளியேறி உள்ளது. இந்த 2 கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளன. தங்களது கூட்டணியில் எந்த கட்சிகள் சேர உள்ளன என்பதை பின்னர் அறிவிப்பதாக அறிவித்துள்ளன. அதே நேரத்தில் விஜயகாந்த், கமல்ஹாசன் இருவரும் தங்களது கூட்டணிக்கு வர வேண்டும் என்று சரத்குமார் நேரிடையாக அழைப்பு விடுத்துள்ளார்.

Most Popular