பிரதமரும், வெங்காயமும்…! வடக்கன்ஸ் பார்த்த வேலை…!
வட மாநிலத்தில் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி, விவசாயிகள் பிரதமருக்கு வெங்காயத்தை தபாலில் அனுப்பி இருக்கின்றனர்.
வெங்காயமும், உருளைக்கிழங்கும் வட மாநில மக்களின் உணவு பட்டியலில் தவறாது இடம்பெறும் பொருள். இவற்றில் எது விலை வீழ்ந்தாலோ அல்லது விளைச்சல் இல்லாமல் போனாலோ அங்குள்ள விவசாயிகள் பாடு திண்டாட்டம்தான்.
பொதுவாக மகாராஷ்டிரா தான் வெங்காயம் 50 சதவீதம் உற்பத்தியாகிறது. நடப்பாண்டில் அதிக விளைச்சல் எதிரொலியாக வெங்காயம் விலை அதலபாதாளாத்துக்கு போய்விட்டது. நாசிக், சோலாப்பூர் மாவட்டங்களில் வெங்காய விவசாயிகளின் நிலை தலைகீழ்.
அறுவடையான வெங்காயத்தை மூட்டை மூட்டையாக மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால் விலையை கேட்டு மயக்கம் வராத குறைதான். ஒரு கிலோ வெறும் 1 ரூபாய்க்கு வியாபாரிகள் எடுத்துக் கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவத்தை மத்திய வேளாண்துறை அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயி சந்தித்துள்ளார். அவரது பெயர் சஞ்சய் சாத்தே. தாம் பயிரிட்ட 750 கிலோ வெங்காயத்துடன் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு 1 கிலோ 1 ரூபாய் தான் என்று வியாபாரிகள் பேச அதிர்ந்து போயிருக்கிறார்.
வேறு வழியில்லாமல் 750 கிலோ வெங்காயத்தை மொத்தமாக 1064 ரூபாய்க்கு விற்று சோகத்துடன் ஊர் திரும்பி இருக்கிறார். வெறுத்து போய் அந்த பணத்தையும் பிரதமுருக்கு மணி ஆர்டர் பண்ணிவிட்டு வந்திருக்கிறார்.
நிலைமை இப்படி இருக்க, வட மாநில விவசாயிகள் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரி உள்ளனர். இதற்காக அகமத்நகர் பகுதி விவசாயிகள் வெங்காயத்தை பிரதமருக்கு தபாலில் அனுப்பி தங்களின் நிலையை உணர்த்தி இருக்கின்றனர். அரசு விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரி உள்ளனர்.