இந்தி பேசற ஆளா நீங்க…? தமிழ்நாட்டில் நோ சான்ஸ்…! வெயிட்டிங்கில் முக்கிய அறிவிப்பு..?
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வில் இனி தமிழ் தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகம் எங்கும் தமிழர்கள் பல துறைகளில் கோலோச்சிய நிலையில் தமிழகத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் அரசு வேலையில் அமர திண்டாடி வருகின்றனர். தமிழ் தெரியாத, தமிழரே அல்லாத பலர் அரசு வேலைகளில் தேர்வெழுதி எளிதாக அமர்ந்து கொள்ள மண்ணின் மைந்தர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சம்பவங்கள் பல அரங்கேறி வருகின்றன.
ரயில்வே, தபால்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பல பணியிடங்களில் பார்க்கும் இடங்களில் எல்லாம் இந்தி பேசும் வட மாநிலத்தவர் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. டிஎன்பிஎஸ்சியில் அப்படி ஒரு நிலைமை இருந்து… பின்னர் தமிழ் தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இப்போது டிஆர்பி தேர்வில் ஏராளமான வடமாநிலத்தவர் தேர்ச்சி பெற்றிருக்கும் விவகாரம் பூதாகரமாகி உள்ளது. சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் டிஆர்பி தேர்வில பாசானவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பின் போது வடமாநிலத்தவர் அதிகம் பேர் வந்திருந்த விவரம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் ஆசிரியர் பணியில், அரசு வேலைக்காக காத்திருந்த பலரின் கனவு இதனால் நசுக்கப்பட்டு இருக்கிறது என்று குரல்கள் ஓங்கி ஒலித்தன. எப்படி டிஎன்பிஎஸ்சியில் தமிழ் கட்டாயம் என்பது போல இதற்கும் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.
அவர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது, டிஆர்பி தேர்வில் தமிழ் மொழித்தாள் கட்டாயம் என்ற அரசாணை வெகு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அதற்கான முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை கூடிய விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த அறிவிப்பு வெளியானால் லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வு ஒளி பெறும் என்று நம்பலாம் என்கின்றனர் கல்வியாளர்கள்.