ONLY INTERVIEW.. ரூ.43 ஆயிரம் சம்பளம்..! ஆவினில் வேலை…!
கோவை; ஆவினில் எழுத்து தேர்வின்றி 43 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் இதற்கான அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. பதவியின் பெயர் கால்நடை ஆலோசகர். இந்த பதவிக்கு நேர்காணல் மட்டுமே நடத்தப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியாக விண்ணப்பதாரர்கள் வரும் 28ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அறிவிப்பின் படி இந்த பதவிக்கு தேர்வாகும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு மாதம் தோறும் 43 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும். கல்வித்தகுதி B.V.Sc.,& AH என்ற பட்டப்படிப்பை முடித்தவர்கள் தகுதியானவர்களாக வரையறுக்கப்பட்டு உள்ளனர்.
நேர்காணல் நடக்கும் முகவரி:
Coimbatore District Co-operative Milk Producers Limited,
Pachapalayam, Kalampalayam Post, Coimbatore – 641010.