இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் TOP 10 செய்திகளை பார்க்கலாம்:
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிறுவணிக கடன் முகாம் இன்று முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
போக்குவரத்து துறை ஊழியர்கள் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை தவிர்த்துவிட்டு பணிக்கு வரவேண்டும் என்று போக்குவரத்துறை கூறி உள்ளது.
செந்தில்பாலாஜியை அமைச்சராக வைத்திருக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 50வது முறையாக யாத்திரை சென்று சிறுமி அதிதி என்பவர் சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி அருகே பொங்கல் பண்டிகையை பாரம்பரிய முறைப்படி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
594வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இம்ரான்கான் கட்சிக்கு கிரிக்கெட் மட்டை சின்னம் கிடையாது என்று லாகூர் உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.
அமெரிக்காவில் மன்காஹட்டன் ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் பலியாகினர்.
கேசவ் மகராஜூக்கு தமது ஜெர்சியை விராட் கோலி பரிசளித்த நிகழ்வு தொடர்பான புகைப்படம் இணையத்தில் கலக்கி வருகிறது.
மும்பையில் இந்திய, ஆஸி மகளிர் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.