Sunday, May 04 12:46 pm

Breaking News

Trending News :

no image

பான் கார்டு வச்சிருக்கீங்களா…? இதை தெரிஞ்சுக்குங்க… இல்லன்னா சிக்கல்தான்


டெல்லி: பான்கார்டு வைத்திருக்கும் அன்பர்களுக்கு வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

வருமான வரி செலுத்துவோருக்கு மிகவும்  முக்கியமாக தேவைப்படுவது பான் கார்டு. பணபரிவர்த்தனைக்கும் இந்த பான் கார்டு ரொம்பவும் அவசியமாகும். வர்த்தகர்கள், வியாபார நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் பான் கார்டு வைத்திருப்பது உண்டு.

இப்போது பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஒரு முக்கிய விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று வருமான வரித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்து உள்ளவர்கள் உண்டு. இது தவறுதலாக நடந்திருக்கலாம்.

சிலர் 2வது பான் கார்டுக்கு தெரியாமல் விண்ணப்பித்து இருக்கலாம். அவர்களுக்கு வருமான வரி வெளியிட்டு உள்ள அறிவிப்பு: ஒருவர் சட்டப்படி ஒரு பான்கார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும். 2 பான் கார்டு வைத்திருந்தால் வருமான வரிச்சட்டம் பிரிவு 272ன் கீழ் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

தெரியாமல் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் வைத்து இருந்தால் அவற்றை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். மீறி வைத்து இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

Most Popular