ரஜினியின் அரசியல் முடிவு…! டுவிட்டரில் ‘பரபர’ பதிவு
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் முடிவு பற்றிய பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
அன்றும், இன்றும், என்றும் அவர் தான் சூப்பர் ஸ்டார். தலையில் முடி இல்லை, ஆப்பிள் நிற சிவப்பு இல்லை ஆனால் அவரின் ஸ்டைல் தான் எல்லாமே.
இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நபராக இருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று பிறந்த நாள். வழக்கத்தை விட இந்த ஆண்டு செம டக்கராக கொண்டாடி தீர்த்திருக்கின்றனர் ரசிகர்கள். அவரின் வீட்டின் முன்பு திரண்டு ஒரே மகிழ்ச்சி தான். திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என எங்கும் பார்த்தாலும் அவரின் பிறந்த நாள் வாழ்த்துகள் தான்.
எப்போதுமே வித்தியாசமாக வாழ்த்து சொல்லும் கவிஞர் வைரமுத்து, இன்றும் தாம் அப்படித்தான் என்று வாழ்த்தி ரஜினிகாந்துக்காக ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அவரின் பதிவு வருமாறு;
https://twitter.com/Vairamuthu/status/1734404847624237365
தங்களுக்குத் தேவையான
ஏதோ ஒரு மின்னூட்டம்
உங்களிடம் உள்ளதாக
மக்கள் நம்புகிறார்கள்
அதை
மிக்க விலைகொடுத்துத்
தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
கலை என்ற பிம்பத்தைவிட
உங்கள்
நிஜவாழ்க்கையின் நேர்மைதான்
என்னை வசீகரிக்கிறது
எதையும் மறைத்ததில்லை
என்னிடம் நீங்கள்
பலம் பலவீனம்
பணம் பணவீனம் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்
அந்த நம்பிக்கையைக்
காப்பாற்றுவேன்
உடல் மனம் வயது கருதி
நீங்கள் எடுத்த அரசியல் முடிவு
உங்கள் அமைதிக்கும் ஆரோக்கியத்துக்கும்
வாழ்க்கையெல்லாம்
வழிவகுக்கும்
வாழ்த்துகிறேன் விரும்பும்வரை வாழ்க!
என்று பதிவிட்டு அசத்தி இருக்கிறார் வைரமுத்து.