தமிழ்நாட்டால் இந்தியாவுக்கே பெருமை…! பிரதமரை ‘பேச’ வைத்த ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டால் இந்தியாவுக்கே பெருமை கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
75வது சுதந்திர தினம் கொண்டாடும தருணத்தில் ஒலிம்பியாட் நடத்துவது பெருமையானது. மிகவும் குறுகிய காலத்தில் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. வரலாற்று ரீதியாக தமிழகத்துக்கும் செஸ் போட்டிக்கும் தொடர்பு இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் உள்ள சிற்பங்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளை குறிக்கும் விதமாக உள்ளது என்றார் இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசினார்.
முன் எப்போதும் இல்லாத வகையாக இந்த முறை சர்வதேச செஸ் போட்டியில் அதிக நாடுகள் கலந்து கொண்டு உள்ளன என்று அவர் கூறினார்.