Sunday, May 04 12:48 pm

Breaking News

Trending News :

no image

கொரோனா படுக்கை வசதி, ஆக்சிஜன் தேவையா..? இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க..!


சென்னை: கொரோனா சிகிச்சை பணிக்காக கட்டறை அறை ( war room) பற்றிய தகவல்களை பெற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை சுழன்றடிக்கிறது. கிட்டத்தட்ட ஒரு நாள் பாதிப்பு என்பது 30 ஆயிரமாக உள்ளது. பல மாவட்டங்களில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதோடு, மருந்துகள் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை போன்ற நிகழ்வுகள் பெரும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளன.

இந் நிலையில், கொரோனா சிகிச்சை பணிக்காக கட்டறை அறை ( war room) பற்றிய தகவல்களை பெற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த எண்களை தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.

அந்த எண்களின் விவரம் வருமாறு:

செங்கல்பட்டு - 044-27427412, 044-27427414, 1800-425-7088, 1077

சென்னை - 98844 69375, 044-46122300, 25384520

காஞ்சிபுரம் - 044-27237107, 27237207

கோவை - 0422-2306051, 2306052, 2306053, 2300295, 2300296

Most Popular