ஆதார் முகவரியை ஆன்லைனில் மாற்றலாமா…? இதோ ஈசி வழி…!
டெல்லி: ஆதார் சென்டர்களுக்கு செல்லாமல் மிக எளிதாக ஆன் லைனில் ஆதார் முகவரியை மிக எளிதாக மாற்றலாம்.
வங்கி கணக்கு தொடங்குவது, பான் அட்டை பெறுவது, செல்போன் எண் வாங்குவது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கு ஆதார் எண் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த ஆதார் அட்டையில் ஏதேனும் குறைபாடு இருந்தாலோ அல்லது பெயர் மாற்றம் என எதுவாக இருந்தாலும் ஆதார் சென்டர்களுக்கு தான் ஓட வேண்டி இருக்கிறது.
இனிமேல் ஆதார் முகவரியை மாற்றுவதில் அந்த சிக்கல் எழ போவதில்லை. வாடகை வீடுகளில் வசிப்போர், வீடு மாறிய பின்னர் முகவரியை ஆதாரில் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
இதுதான் அதற்கான ஈசியான வழி:
UIDAI அதிகாரப்பூர்வ தளமான https://uidai.gov.in சென்று மாற்றிக் கொள்ளலாம். இந்த இணையதளத்தின் மெனு பாருக்கு சென்று my aadhar என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதில் சில விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
முகவரி மாற்றம், இருப்பிட சான்றிதழ், சமையல் எரிவாயு சிலிண்டர் ரசீது, பாஸ்போர்ட் எண், வாடகை ஒப்பந்த பத்திரத்தின் நகல் ஏதாவது ரொம்ப அவசியம். மொபைல் எண்ணை பதிவு செய்ய வேணடும். பின்னர் address validation letter முகவரிக்கு தபாலில் பத்திரமாக அனுப்பி வைக்கப்படும். பிறகு ஆதார் இணையதளத்தில் சென்று proceed to update address என்பதை க்ளிக் பண்ண வேண்டும்.
Update addressல் சீக்ரெட் கோட் எண்ணை முகவரி மாற்றம் செய்ய பயன்படுத்த வேண்டும். அனைத்து விவரங்களை சரிபார்த்து submit செய்ய வேண்டும். முகவரி மாற்றம் செய்ய போகும் போது கையில் அனைத்து ஆவணங்களையும் வைத்துக் கொண்டு அப்லோட் செய்தாக வேண்டும். அனைத்து வழிமுறைகளும் முடிந்த பின்னர், https://ssup.uidai.gov.in/checkSSUPStatus/ என்று டைப் செய்து முகவரி மாறி உள்ளதா என்று பார்த்துக் கொள்ளலாம்.