அடடே… அமர்க்களம்…! இவர் தான் தமிழகத்தின் புதிய டிஜிபி..! சூப்பர்
சென்னை: தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் தற்போதைய டிஜிபியாக திரிபாதியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், புதிய டிஜிபியைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கின. ஒரு டிஜிபியின் பதவிக்காலம் முடிவடையும் முன்னர், அடுத்த டிஜிபிக்கு தகுதியான அதிகாரிகளின் பட்டியலைத் தேர்ந்தெடுத்து அந்த பட்டியலை மத்திய பொது சேவை ஆணையத்திற்கு அனுப்புவது தமிழக அரசின் வழக்கம்.
தகுதிகள், சீனியாரிட்டி ஆகியவற்றை பொறுத்து, இந்த பட்டியலை உள்துறை அதிகாரிகள், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மதிப்பாய்வு செய்து, அவர்களில் இரண்டு அல்லது மூன்று பேரை இறுதி செய்து தமிழக அரசுக்கு பரிந்துரைத்து அனுப்பி வைப்பர்.
அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து புதிய டி.ஜி.பி.யாக தமிழக அரசு நியமிக்கும். இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் புதிய டிஜிபி தேர்வு குறித்த ஆலோசனையின் போது தமிழக அரசு வழங்கிய பட்டியலில் 3 நபர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டது.
முடிவில், சைலேந்திர பாபு தமிழகத்தின் புதிய டிஜிபியாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டு உள்ளார். அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 1987ம் ஆண்டு தமிழக காவல்துறை பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.