Sunday, May 04 12:03 pm

Breaking News

Trending News :

no image

பாமக 10…! காட்டியாச்சு கெத்து


கடைசியாக அது நடந்தேவிட்டது. அதிமுகவை முந்திக் கொண்டு, பாமகவை தமது கூட்டணியில் பாஜக இழுத்துள்ளது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது,

வழக்கம்போல் யாருடன் கூட்டணி என்பதில் ஜவ்வு, இழுப்பாக இழுக்கும் பாமக இம்முறையும் அதை கனக்கச்சிதமாக செய்திருக்கிறது. முதலில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை, அப்படியே பாஜகவுடன் பேச்சுவார்த்தை என்று இருபுறமும் அரசியல் பேரங்கள் பேசப்பட்டன.

அதிமுகவுடன் கூட்டணி ஓகே, எல்லாம் முடிந்தது என்று செய்திகள் கசிந்த தருணத்தில் அடுத்த சில மணி நேரங்களில் கூட்டணி காட்சிகள் மாறி. காலையில் அதிமுக என்று இருக்க, மாலையிலேயே பாஜகவுடன் கூட்டணி என்று பாமக தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அப்பாடா… ஒரு வழியாக கூட்டணி அறிவித்தாயிற்று, எத்தனை தொகுதிகள் நமக்கு என்று பாமக தொண்டர்கள் சுவாரசியமாகிவிட அதற்கும் இப்போது பதில் கிடைத்துவிட்டது. மொத்தம் 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.

தைலாபுரத்தில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது செய்தியாளர்களிடம் அன்புமணி பேசியதாவது;

10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக பாமக இருந்திருக்கிறது. லோக்சபா தேர்தலில் இதே கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது.

பிரதமர் மோடி நல்லாட்சி தொடர பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை எடுத்திருக்கிறோம். எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

பின்னர் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது; தமிழக அரசியல் களம் தற்போது மாறியிருக்கிறது. 2026ம் ஆண்டில் நிச்சயம் அரசியல் மாற்றம் அரங்கேறும்.

சேலத்தில் நடைபெறும் பாஜக மாநாட்டுக்கு ராமதாஸ், அன்புமணி இருவரும் வர சம்மதம் தெரிவித்துள்ளனர். பாமக மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிடும். எந்த தொகுதிகள் என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார்.

Most Popular