மதுவில் மூழ்கி கிடக்கும் தமிழகம்…! சாட்டையை சுழற்றிய ஐகோர்ட்….!
மதுரை: தமிழகம் மதுவில் மூழ்கி உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சாட்டையை சுழற்றி உள்ளது.
மதுரையில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி தாஹா முகமது என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது மதுவிவகாரம் குறித்து தமது கவலையை உயர்நீதி மன்றம் வெளிப்படுத்தி உள்ளது.
மதுவிலக்கால் குற்றங்கள் குறைவதோடு, மக்களின் உடல்நலமும் மேம்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என்று யோசனையையும் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
பெண்கள், குழந்தைகளின் கண்ணீரை துடைக்கும் வகையில் மது விலக்கை அரசு அமல்படுத்தலாம் என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது. மதுவினால் கிடைக்கும் வருமானத்தினால் மதுவில் தமிழகம் மூழ்கி உள்ளது என்றும் வருத்தம் தெரிவித்து உள்ளது.