தமிழகத்தில் இன்று 5528 பேருக்கு கொரோனா பாதிப்பு: 64 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் இன்று 5528 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசானது, அதை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந் நிலையில், சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
இதையடுத்து, ஒட்டு மொத்தமாக இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,86,052 ஆக அதிகரித்து உள்ளது. இன்று மட்டும் கொரோனாவுக்கு 64 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,154 ஆக இருக்கிறது. தற்போது 48,482 பேர் சிகிச்கையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 6,185 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். ஒட்டு மொத்தமாகத் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,29,416 ஆகும். சென்னையில் இன்று 991 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 83,411 பேருக்கும், ஒட்டு மொத்தமாக 54,49,635 பேருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.