வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்துவிட்டீர்களா..? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
டெல்லி: 2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் கால அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை வருமான வரி நீட்டித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் இருந்த நிலையில், வருமான வரி உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியாத நிலை உருவானது. இதையடுத்து செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.
இன்றுடன் அந்த அவகாசம் முடிகிறது. இந் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி, வருமானவரி கணக்கை தாக்கல் செய்யும் காலக்கெடு மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30 வரை நீட்டித்து அதற்கான அறிவிப்பை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.