இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் டாப் 10 செய்திகளை பார்க்கலாம்:
மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர் இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கின்றனர்.
நாடாளுமன்ற மக்களவைக்குள் நிகழ்த்தப்பட்ட வண்ண புகை குண்டுகள் தாக்குதல் குறித்து இன்று விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 6ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக UGC NET தகுதி தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்கள் இன்று தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
சிக்கிமில் நிலவும் கடும் பனி பொழிவில் 800க்கு மேற்பட்ட சிக்கி தவிக்க, பெரும் போராட்டத்துக்கு பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய 6000 ரூபாய்க்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் என்று தெரிகிறது.
கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் பதிவாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 230 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ரூ.4.55 லட்சம் மதிப்புள்ள எட்டரை கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 1562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் கூறி உள்ளார்.
572வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இறுதி மற்றும் கடைசி டி 20 ஓவர் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.