லைசென்ஸ் வாங்க 8 போட வேண்டியது இல்லை…! அப்ப என்ன பண்ணணும்…?
சென்னை: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களை ஓட்டி காட்ட தேவையில்லை என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இன்றைய உலகில் வாகனங்கள் இல்லாத வீடுகள் கிடையாது. அதிலும் குறிப்பாக எல்லோர் வீட்டிலும் கட்டாயம் ஒரு டூவீலராவது உண்டு. இந்த வாகனங்களை ஓட்ட லைசென்ஸ் என்பது கட்டாயம்.
டிரைவிங் லைசென்ஸ் பெறணும் என்றால் தனியார் ஒட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் தனிப்பட்ட முயற்சியில் டிரெய்னிங் எடுத்திருந்தாலும் ஆர்டிஓ அலுவலகத்தில் 8 போட்டு காட்ட வேண்டும். அப்போது தான் லைசென்ஸ் கிடைக்கும்.
இதுதான் நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால் இந்த நடைமுறை இன்று முதல் மாற்றப்பட்டு உள்ளது. டிரைவிங் லைசென்ஸ் பெற இனி 8 போட்டு காட்ட வேண்டியது இல்லை. இந்த புதிய நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
போக்குவரத்து விதிகள், வாகன கட்டமைப்பு, முதலுதவி உள்ளிட்டவை குறித்து தனியார் பயிற்சி நிறுவனங்கள் சொல்லி தரவேண்டும். மலைகள், கிராமங்கள், நகரம், மேடு, பள்ளம் என பல்வேறு நில அமைப்புகளில் ஓட்டி கட்டி பழக்க வேண்டும்.
வாகனங்களை இயக்கும் போது அது வீடியோவாக ரெக்கார்டு செய்ய வேண்டும். பயிற்சிகளில் வெல்லும் ஓட்டுநர்கள் உரிய சான்றிதழுடன் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில 8 போடாமல் ஓட்டுநர் உரிமம் பெறலாம்.