ஆரம்பிக்கலாமா..? நான் ரெடி…! ஓபிஎஸ்சுக்கு ‘க்ரீன்’ சிக்னல்
சென்னை: இணைந்து செயல்படுவோம் என்று ஓ பன்னீர்செல்வம் கருத்தை வரவேற்பதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கும் அக்கட்சிக்கும் நேற்றும் இன்றும் முக்கியமான நாள் என்றே சொல்லலாம். இன்னும் சொல்ல போனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் நாள்.
இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது செல்லாது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் மேல்முறையீடு செய்துள்ளது. அதே நேரம் ஓபிஎஸ் முகாம் களைகட்டி உள்ளது.
அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அறைகூவல் விடுத்த ஓபிஎஸ் யாரும் எதிர்பாராத வகையில் சசிகலா, டிடிவி தினகரனுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பு பற்றி பல்வேறு விதமாக கருத்துகள் ஒரு பக்கம் இருந்தாலும் வரவேற்பும் இருந்து வருகிறது.
இது குறித்து அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:
தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.O.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள்.
அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே என்று வரவேற்று உள்ளார்.