Sunday, May 04 01:10 pm

Breaking News

Trending News :

no image

முதலில் இறங்கி.. பின்னர் காங்.சை ‘சாத்திய’ பாஜக


டெல்லி: 4 மாநில தேர்தல் முடிவுகளில் மத்தியில் ஆளும் பாஜக, காங்கிரசை காலி செய்து 3 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மிசோரமை தவிர்த்து, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிவுகள் காலை 8 மணி முதல் வெளியாக தொடங்கின.ஆரம்பத்தில் என்ன கதை வேற மாதிரி போகுதே என்று அனைத்து தரப்பினரும் நினைக்க, நேரம் ஆக ஆக… வழக்கமான சந்திரமுகியாக மாறியது பாஜக.

சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில்  ஆரம்பகட்ட டிரெண்டிங் அனைவரையும் ஆச்சரியம் கொள்ள வைத்தது.  மற்ற 2 மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவற்றில் பாஜக, காங். கட்சிகள் இடையே neck to neck என நிலவரம் இருந்தது.

பின்னர் சிறிதுநேரத்தில் பாஜக மெல்ல, மெல்ல மேலே ஏற ஆரம்பித்தது. ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துவிடும் என்ற நம்பிக்கை தவிடு பொடியானது. 199 தொகுதிகளின் முடிவுகளில் பெரும்பான்மைக்கு தேவையான 100 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரசோ, 75 தொகுதிகளை கடந்து, ஆட்சியை பறி கொடுத்து இருக்கிறது.

இதே கதைதான், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சத்தீஸ்கரில்…! 90 தொகுதிகள் தான் என்ற போதிலும், 46 தொகுதிகள் ஆட்சி அமைக்க போதும். மெஜாரிட்டியை கடந்து பாஜக முன்னிலையில் இருக்க… தொண்டர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். காங்கிரசோ ஆட்சியை பறிகொடுத்த சோகத்தில் இருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அங்கு 230 தொகுதிகளில் 130க்கும் அதிகமான தொகுதிகளில் தாமரை மீண்டும் மலர… கை சின்னம் தோல்வி அடைந்திருக்கிறது.

ஆனால் தெலுங்கானாவில் நிலைமை முற்றிலும் மாறி இருக்கிறது. சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி, ஆட்சியை காங்கிரசிடம் இழந்திருக்கிறது. 119 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 60 தேவை… காங்கிரசோ 70 தொகுதிகளில் கடந்து வெற்றியை பெற்றிருக்கிறது. இங்கு பிஆர்எஸ் கட்சிக்கு 37 இடங்களும், பாஜகவுக்கு 8 இடங்களும் கிடைத்திருக்கின்றன. 

Most Popular