Sunday, May 04 01:00 pm

Breaking News

Trending News :

no image

மீன் மாதிரி உடம்போட பிறந்த குழந்தை..! திகிலில் மக்கள்…!


ஐதராபாத்: ஐதராபாதில் மீன் போன்ற உடலமைப்புடன் பிறந்த குழந்தை, 2 மணி நேரத்தில் உயிரிழந்தது.

ஆங்கிலத்தில் மெர்மெய்ட் சின்ட்ரோம் என்றழைக்கப்படும் மீன் போன்ற உடலமைப்புடன் புதன்கிழமை இரவு 7 மணிக்கு இந்தக் குழந்தை பிறந்து உள்ளது. ஆனால், பிறந்த இரண்டு மணி நேரத்தில், குழந்தைக்கு பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிவியல்பூர்வமாக, சிரெனோமேலியா என்று கூறுகிறார்கள். அதாவது, முதுகெலும்பும், குழந்தையின் கால் எலும்புகளும் தனித்தனியாக பிரியாமல் ஒன்றாகவே இணைந்து உருவாவதால் ஏற்படும் பிரச்னை.

இதற்கு முன்பு, இதுபோன்ற பிரச்னையை எதிர்கொண்டதில்லை என்பதால், இது மிகவும் சிக்கலாக மாறியதாகவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

Most Popular